குளித்தலை பேருந்து நிலையத்தில்"விழா கோலம்"

            குளித்தலை பேருந்து நிலையத்தில்"விழா கோலம்"


              தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு குளித்தலை ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக இசை வெளியீட்டு விழாவினை குளித்தலை பேருந்து நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு மிக பிரம்மாண்டமான LED திரை அமைத்து கண்டு மகிழ்ந்தனர் இந்த விழாவில், கொரோனோ விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு குறித்த காவலன் செயலி  விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, உள்ளிட்ட விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது


               இதில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை தளபதி விஜய் ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாற்றினார்,இதில் சிறப்பு விருந்தினர்களாக, கவிஞர் ராகுல் காந்தி, கோட்டைமேடு சாமிநாதன், குளித்தலை பகுதி மாணவர்கள் கூட்டமைப்பு, அனைவரும் கலந்து கொண்டனர், இந்த விழாவினை குளித்தலை ஒன்றிய தலைவர் A.சதாசிவம் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் பொருளாளர் நிறேஷ் குமார், துணைத்தலைவர் இனுங்கூர் வினோத், அமைப்பாளர் வை.புதூர் தியாகு, துணை செயலாளர் பாண்டியன், ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது


                      இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை கண்டு களித்தனர்....செய்தி :முகிலன்  கரூர்


 


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,