அனகை ஜெய் பிரதர்ஸ் தலைமையில் இரண்டாம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்
சென்னை அனகாபுத்தூரில் மருத்துவ சேவையுடன் துவங்கிய சமூக ஆர்வலர் வேலாயுதம் அவர்களின் பிறந்த நாள் விழா
*
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் சமூக ஆர்வலரும் அனகாபுத்தூர் முன்னாள் நகர மன்ற தலைவருமான அனகை வேலாயுதம் அவர்களின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு அனகை ஜெய் பிரதர்ஸ் தலைமையில் இரண்டாம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம்,கண் பரிசோதனை, கண்மருத்துவம்,பல் மருத்துவம்,நீரிழிவு மருத்துவம்,இரத்த அழுத்த பரிசோதனை, இசிஜி,பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி ஆகிய சிறப்பு மருத்துவ சிகிச்சை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் விழாவின் தலைவர் அனகை வேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு இரத்த தானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் இளைஞர்கள்
பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Comments