திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ள் டேங்கர் லாரிகள் மூலம் ஏர் கம்பிரஷர் வைத்து நகராட்சிபகுதிகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் டேங்கர் லாரிகள் மூலம் ஏர் கம்பிரஷர் வைத்து நகராட்சி, காவல்நிலையம், பழைய பேருந்துநிலையம்,புதிய பேருந்துநிலையம் மற்றும் நகராட்சிபகுதிகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.



 



திருத்துப்பூண்டியில்
கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை 144 தடை உத்தரவை மீறி நகருக்குள் வரும் வாகனங்களில் மீண்டும் வராமல் இருக்க பெயின்ட் முத்திரையிட்டு எச்சரிக்கை.
திருத்துறைப்பூண்டி நகரருக்கள் 144 தடை உத்தரவை மீறி நகருக்குள் வந்த இருசக்கர வாகனம், கார், ஆட்டோ , டாடா ஏசி உள்ளிட்ட வாகனங்கள் கடந்த 25-ந்தேதி முதல் இதுவரை 50 வாகனங்ககளை போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி மேற்பார்வையில்  இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துவந்தனர். இந்த நிலையில் நகருக்குள் மீண்டும் மீண்டும் வரும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு போலீசார் பெயின்டால் அடையாளம் இட்டு தொடர்ந்து இதேபோல் தடை உத்தரவை மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்து திரும்ப வாகனங்களை நீங்கள் பெற முடியாத நிலை ஏற்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி