திருத்துறைப்பூண்டியில் வர்த்தக சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு துண்டு  பிரசுரம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வர்த்தக சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு துண்டு  பிரசுரம் வழங்கி  பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு 2000மாஸ்க்கள் வழங்கும் பணி நடைபெற்றது.
  கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு வர்த்தகர் சங்கதலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பு பொறுப்பு அலுவலர் சிவகுமார்,
 போலீஸ் டிஎஸ்பிக்கள் பழனிச்சாமி, முத்துப்பேட்டை இனிக்கோ திவ்யன் முன்னிலை வகித்தனர்.இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், இளங்கிள்ளிவளவன், புஷ்பவள்ளி  நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம்  மற்றும் வர்த்தகர் சங்க செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும்  கொரோனாவைரஸ் பரவுதலை தடுக்க பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்  வர்த்தகர் சங்கம் வழங்கி அதனை தடுக்கும் முறைகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பொதுமக்கள் மற்றும் போலீசார், சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக வர்த்தகர் சங்கம் சார்பில் 2000 மாஸ்க்குகள் வழங்கப்பட்டது.
 தற்போது திருத்துறைப்பூண்டியில் மாஸ்க் தட்டுப்பாடு காரணமாக ஒரு மாஸ்க் ரூ 35-க்கு விற்கப்படுகிறது. இந்தநிலையில் வர்த்தகர் சங்கம் சார்பில் சுமார் 2000 மாஸ்க்குகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி