எழுத்தாளர்கள் தொட்டு எழுத வேண்டிய மை

அறிவியல் பூர்வமான கருத்துக்களை தன் திரைப் பாடல்கள் வாயிலாக  மக்களிடையே  பரப்பிய,   ஒரு பிரபல நகைச்சுவை நடிகர்,  எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார். 


 


            தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட ‘மை’யில் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?


 


சிலர் தற்பெரு ‘மை’ தொட்டு எழுதுகிறார்கள்.  சிலரோ பொறா ‘மை’ யில் தொட்டு எழுதுகிறார்கள்.  வேறு சிலர் பழ ‘மை’ யில் தொட்டு எழுதுகிறார்கள்.  பரவாயில்லை.  இவற்றை யெல்லாம் அருமையான எழுத்துகள் என்று சொன்னாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில   ‘மை’ கள் உள்ளன.  அவை .  .  .  .  . கய ’மை’,  பொய் ‘மை’, மட ‘மை’, வேற்று  ‘மை’  என்றவுடன் கூட்டத்தில் கரவொலி நிற்க வெகு நேரமானது.


 


தொடர்ந்து, “எழுத்தாளர்கள் தொட்டு எழுத வேண்டிய  ‘மை’ கள் என்னென்ன தெரியுமா?  நன் ‘மை’ தரக்கூடிய நேர் ‘மை’, புது ‘மை’, செம் ‘மை’, உண் ‘மை’.  இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியவை எவை தெரியுமா?  வறு ‘மை’, ஏழ் ‘மை’, கல்லா ‘மை’, ஆகியவையே”  என்று  பேசி முடித்தார் அந்த மேதை.  விழா மேடை . . .  ஆரவாரத்தில்  அலை மோதியது சில நிமிடங்களுக்கு.


 


யார் அந்த மேதை  தெரியுமா?  கலைவாணர் என்ற பட்ட பெயருக்குச் சொந்தக்காரர், என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்தான்.    


தகவல் செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,