தர்மபுரியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடந்த மறியல்

தர்மபுரியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடந்த மறியல் போராட்டத்தை யொட்டி 255 பேரை டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்


தர்மபுரி மாவட்டம் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் செய்தனர் போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் கலாவதி தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தை சிஐடியூ மாநில செயலாளர் நாகராஜன் தொடங்கி வைத்தார் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று ராஜகோபால் பூங்கா அருகே மறியல் செய்தனர் அப்போது 10 ஆண்கள், 245 பெண்கள் உட்பட மொத்தம் 255 பேரை தர்மபுரி டவுன் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சமாக மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களில்,விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் பெண்கள் ஈடுபடும் கூலி, வழங்கப்படாத வேலைகள் அனைத்தையும் அங்கீகரிக்க வேண்டும் திட்டப் பணியாளர்கள் அனைவரையும் தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் சட்டமன்றம்,பாராளுமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தருமபுரி செய்தியாளர். கணபதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்