மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா



குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்- அதுவே வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் - ஐ.ஆர்.எஸ்.பேச்சு



சுங்கவரித் துறை துணை ஆணையாளர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்



மத்திய பெட்ரோலியத் துறை சான்றிதழ்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி பாராட்டு



தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பெட்ரோலியத் துறையின் சார்பில் நடைபெற்ற ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது .



ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .விழாவில் திருச்சி சுங்க வரி துறையின் துணை ஆணையாளர் ஆர் . பாலசுப்பிரமணியன் ஐ.ஆர்.எஸ். பங்கேற்று ஓவிய போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில் , குறிக்கோளை அனைத்து மாணவர்களும் இளம் வயதில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நாம் வெற்றி பெற்றவர்களாக ஒரு காலத்தில் மாறமுடியும். நான் இளம் வயதில் குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டதால் மிகப் பெரிய பதவிக்கு வர வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதால் இன்று உங்கள் முன்பாக திருச்சி சுங்க வரி துறையின் துணை ஆணையாளராக நின்று பேசிக்கொண்டு உள்ளேன். நீங்களும் அதுபோன்ற வாழ்க்கையில் இளம் வயதில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து நன்றாகப் படித்து மிகப் பெரிய பதவிகளுக்கு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களால் நிச்சயமாக முடியும் என்று பேசினார்


.மத்திய அரசின் பெட்ரோலிய துறையின் சார்பில் சுற்றுப்புறச் சூழலை வளமாக வைத்துக் கொள்ளும் வகையில் எண்ணெய் வளங்களை நல்ல முறையில் பயன்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆங்கிலக் கட்டுரையில் ஜோயல் ரொனால்டோ, தமிழ் கட்டுரையில் கீர்த்தியும், ஓவிய போட்டியில் பாலமுருகன், வெங்கட்ராமன், அஜய் பிரகாஷ், ஐஸ்வரியா ஆகியோரும் சான்றிதழ்களை பெற்றனர் . நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.



பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி சுங்கத்துறை துணை ஆணையாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஐ.ஆர்.எஸ். மாணவ,மாணவியர்க்கு மத்திய அரசு சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,