பத்திரிகையாளர்கள் பயன்பெறும் இலவச பல் மருத்துவ பரிசோதனை முகாம் துவக்க விழா

பத்திரிகையாளர்கள் பயன்பெறும் இலவச பல் மருத்துவ பரிசோதனை முகாம் துவக்க விழா..

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பல்ப் பல் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பல் பரிசோதனை முகாம் துவக்க விழா 12.03.2020 வியாழனன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது..

பத்திரிகையாளர்கள் பயன்பெறும் வகையில் இலவச பல் பரிசோதனை முகாம் தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெறும்..

மருத்துவ முகாமை தூர்தர்ஷன் இணை இயக்குனர் I.விஜயன் விளக்கேற்றி தொடங்கி வைத்தார். சட்ட ஆர்வலர் காசிமாயன், மக்கள் விசாரணை ஆசிரியர் A.மவுரியன், கல்வி டுடே ஆசிரியர் ராம சுப்ரமணியன், சிங்கார சென்னை ஆசிரியர் ரங்கநாதன், நடுவண் குரல் ஆசிரியர் கார்த்திக், சிங்க முழக்கம் பிரகாஷ் உள்ளிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர்..

அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) மதிப்பிலான அதிநவீன கருவி முலம் பல் பரிசோதனை செய்யபட்டது. இப்பரிசோதனை முகாம் தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறும்.

பல்ப் பல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கணேஷ் வையாபுரி பல் பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கி ஆலோசனையும், விழிப்புணர்வும் செய்தார்..

விழாவை பீப்பிள் டுடே சத்யநாராயணன், நமது நகரம் சரவணன், அரசியல் முத்திரை செல்வம், பேனா முள் கார்த்திக், சட்ட கேடயம் ராஜன், நுண்ணறிவு சிவக்குமார், திரை தீபம் மதி ஒளி ராஜா, திங்கள் மலர் சசிகுமார், வாசன் பார்வை வினோத், வாசன் பார்வை தேனை சரண், புதுகை குரல் விஜயகுமார், மண்ணின் குரல் சரவணன், நமது நகரம் புகழேந்தி, பீப்பிள் டுடே வெளியீட்டாளர் G.ஜெயகோபால், பீப்பிள் டுடே N.S.உமாகாந்தன், A.ஜான்சன் ராஜா, M.அமிர்தலிங்கம், C.K.ஜெகன் விஸ்வா, மக்கள் விசாரணை சிவசங்கரன், நடுவண் குரல் பால சந்திரா, நுண்ணறிவு நிருபர்கள் ஜேம்ஸ் என்ற பெருமாள், பிரபாகர், உள்பட மற்றும் பல பத்திரிகை நண்பர்கள் கலந்துக்கொண்டு மருத்துவ முகாமை சிறப்பு பெற செய்தனர்.

இம்முகாமை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

குறிப்பு: 12.3.2020 முதல் 12.04.2020 வரை ஒரு மாதம் தொடர் முகாம் நடைபெறும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை