வதந்திகளை நம்பவேண்டாம்
06.03.20
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கொரனோ வைரஸால் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையில் தலைமை மருத்துவர் புகார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கொரனோ வைரஸ் காரணமாக ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள மக்கள் அச்சமடைந்து சிகிச்சை பெற தயங்கி வருகின்றனர். இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்த தெரிவித்ததாவது.... மருத்துவமனையில் சாதாரண ஜுரம் காரணமாக கூட யாரும் அனுமதிக்கப்பட வில்லை என்பதே உண்மை. எனவே கொரனோ வைரஸால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது எனவே பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை மேலும் வாட்ஸ்அப்பில் பரவும் கொரனோ வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரப்பிய நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையில் புகார் வழங்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை தெரிவித்தார். சிவகுமார் தலைமை அரசு மருத்துவர்
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments