காச நோய் பற்றிய விழிப்புணர்வு
உலகக் காச நோய் நாள் (World Tuberculosis Day)
மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று உலகக் காச நோய் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் (86,00,000) மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் (13,00,000) மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்
உலகக்காசநோய் நாள் உலக சுகாதார அமைப்பினால் அதிகார பூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாட்களில் ஒன்றாகும்.
1882 மார்ச் 24 இல் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கானகாரணியை(TBbacillus) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார்.
அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக் கின் இக்கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.
1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
இந்நோயைப் பற்றி விரிவாக எழுதலாம் என்று எண்ணுகையில், உயிர்க்கொல்லி டிசம்பர் 2019-ல் தொடங்கி, அத் தொற்று அறவே நீக்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கப்பட்டிருந்த நேற்றைய தினம் சீனாவில் வரையில் இன்று பிற்பகல் சுமார் 3.30 மணி அளவில் அத் தொற்று மீண்டும் சீனாவில் தாலைதூக்கி யிருக்கறது என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாக வெளிவந்தது. எனவே, இதில் மேற்கொண்டு கவனம் செலுத்த இயலவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
தகவல் செ ஏ துரைபாண்டியன்
Comments