மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மட்டும் திரைப்படம்

மகளிர் தினத்தை முன்னிட்டு


திரைப்படம்


மகளிர் மட்டும்


 குடும்பசூழ்நிலைக்காக வேலைக்கு போகும் பெண்கள் படும் அவதியை, சித்ரவதையை, கேவலமான ஆண்களின் பார்வையை சந்திக்கும் பல லட்சம் பெண்களில் மூன்று பேராக நடித்திருப்பது ரேவதி, ரோகினி மற்றும் ஊர்வசி. மூவருமே நடிப்பை வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் இந்த படத்தில். இந்த படத்தை முதல் முறை பார்பவர்கள் கண்டிப்பாக விழுந்து விழுந்து சிரிக்கும் வசனத்தை எழுதியிருப்பது என் பெயர் கொண்ட நடிகர் கிரேசி மோகன் அவர்கள். குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு வரும் பெண்களை காமத்தால் அடையத்துடிக்கும் கார்மெண்ட்ஸ் கம்பெனி மேலாளராக நடித்திருப்பது நாசர் அவர்கள்.



 

 

நாசர் செய்யும் சில்மிசங்களை பொறுக்கவும் முடியாமல் வேலையை விடவும் முடியாமல் அவதிப்படும் பெண்கள். அப்படிப்பட்ட மேலதிகாரியை கடிவாளம் போட்டு அடக்கும் படமாக மகளிர் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. அங்கங்கே சினிமாதனம் இருந்தாலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் இப்படி கொடூர  மனம்  படைத்த ஆண்களை சமாளித்து பல பெண்கள் வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது எவ்வளவோ மாறிவிட்டது என்றாலும் நிறைய இடங்களில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்ணை பெண்ணாக பார்க்காமல் போகப்பொருளாக பார்க்கும் வக்கரபுத்தி படைத்த ஆண்கள் நேற்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள் நாளையும் இருப்பார்கள். அவர்களுக்கு இந்தப்படம் ஒரு பாடம்.




































மகளிர் மட்டும்
இயக்கம்சிங்கீதம் சீனிவாச ராவ்
தயாரிப்புகமல்ஹாசன்
இசைஇளையராஜா
நடிப்புநாசர்
ரேவதி
ஊர்வசி
ரோகிணி
நாகேஷ்
ரேணுகா
தலைவாசல் விஜய்
கலைப்புலி எஸ். தாணு
கிரேசி மோகன்
மதன் பாப்
பிரசாந்த்
ஆர். எஸ். சிவாஜி
சந்தானபாரதி
சேது விநாயகம்
'பசி' சத்யா
கமல்ஹாசன்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,