சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் சேகநாதபுரம் சாரிடபுள் டிரஸ்ட் மற்றும் லக்கி திருமண மண்டபம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்
சென்னை ஆதம்பாக்கத்தில் லக்கி திருமண மண்டபத்தில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் சேகநாதபுரம் சாரிடபுள் டிரஸ்ட் மற்றும் லக்கி திருமண மண்டபம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடு லக்கி நாசர் மற்றும் பேராசிரியர் Dr.A.ஷாஹீல் ஹமீது இம் முகாமை துவங்கி வைத்தவர் காவல்துறை துணை ஆணையாளர் புதிய தோமையர் மலை முனைவர் கி.பிரபாகரன் TPS. நிகழ்ச்சியில் இலவச கண் பரிசோதனை, இலவச கண்புரை அறுவை சிகிச்சை,இலவச லென்ஸ் மற்றும் தங்குமிடம், உணவு மருத்துவம் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.செய்தியாளர். மு. அமிர்தலிங்கம்
Comments