திரௌபதி.🔥🔥🔥 சிறப்பு திரை விமர்சனம்

திரௌபதி.🔥🔥🔥


சிறப்பு திரை விமர்சனம்


   தன் மேல் சாதீய சாயம் பூச நினைத்தவர்கள், அதே சாதீய போர்வையில் ஒளிந்து கொண்டு அக்கிரமம் செய்யும் கும்பலின் முகத்திரையை கிழித்து காட்டியவள்..


படத்தில் எந்த குறிப்பிட்ட சாதியை உயர்த்தி காட்டியோ, குறிப்பிட்ட சாதியை தாழ்த்தி காட்டியோ இல்லாமல், ஒரு சரியான நேர்கோட்டில் நடப்பு உண்மைகளை ஒவ்வொரு காட்சிகளிலும் கொண்டுவந்து வாழ்ந்து காட்டி இருப்பது சிறப்பு...அதே நேரத்தில் சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கும்பலுக்கு மரண செருப்படி கொடுத்து இருப்பது மிகச்சிறப்பு...


பெரிய நட்சத்திரங்களை வைத்து, கோடிகளை முதலீடு போட்டு சில குறிப்பிட்ட சாதியினரை ஆதிக்ககார்களாகவும், சாதி வெறி பிடித்தவர்களாகவும் , சில குறிப்பிட்ட சாதியினரை தாழ்த்தப்பட்டவர்களாகவும் ,அப்பாவிகளாகவும் காட்ட நினைத்து பல்லிளித்தவர்கள் மத்தியில், முகம் அறியா மனிதர்களை நட்சத்திரங்களாக ஜொலிக்க வைத்து, சில லட்சங்கள் செலவில் ஒரு சரித்திர சாதனையை சாதித்து காட்டி உள்ள படக்குழுவினர் திறமை மேலும் சிறப்பு..


முகம் சுளிக்கும் வசனம் இல்லை...காட்சிகள் இல்லை...வசனங்களிலும், காட்சிகளிலும் எதார்த்தம் மட்டுமே இருப்பது ரசிக்க கூடிய ஒன்று...நடிப்பிலும், உடையிலும், வசனத்திலும் அருவெறுக்க தக்க ஒன்றையும் காண இயலாமல் இருப்பது படத்தின் பலம்...அப்படிப்பட்ட காட்சிகளை அருவெறுக்க தக்க வகையில் கோடிட்டு காட்டும் நபர்களின் எண்ணங்களில் தான் அருவெறுப்பு குடி இருக்க வேண்டும்.....மொத்தத்தில் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை கூட்டி செல்லும் அப்பாக்களும், அம்மாக்களும் நொடி பொழுது கூட நெளிய வைக்கும் காட்சிகள் இல்லாமல் இருப்பது தனிச்சிறப்பு..


லவ் பண்ணினா முதலில் மேட்டர் முடி...அவளை கட்டு, இவனை வெட்டு என்று என்று காது கூசும் வசனம் பேசும் பகுத்தறிவு படங்களுக்கு மத்தியில் கண்ணியமான வார்த்தைகளை மட்டுமே திரையில் கொண்டு வந்து இருப்பதுக்கு மட்டுமே தனியாக ஒரு சபாஷ் சொல்லவேண்டும்..


ஒரு சினிமாவை சினிமா தனம் இல்லாமல் எதிர்த்த வாழ்க்கையுடன் கொண்டு செல்வது போல காட்சிகள் அமைப்பு தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்..நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் ஒரு படத்தை, நல்ல பாடமாக பார்க்க வைத்த படக்குழுவினர் அனைவர்க்கும் பாராட்டுகள்...


மொத்தத்தில் திரௌபதி படம் அல்ல, பெண்களுக்கும்,பெண்களை பெற்றவர்களுக்கும் பாடம்..


இந்த படத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் நமக்கு கொடுத்த படத்தின் இயக்குனர் சகோதரர் மோகன் அவர்களுக்கும், இணை இயக்குனர் சிவா அவர்களுக்கும் என் நன்றிகளும் பாராட்டுகளும்..


இது போன்ற சிறந்த படைப்புகள் வர நீங்கள் எல்லாருக்கும் ஒரு வழிகாட்டி உள்ளீர்கள்...நன்றி...நன்றி.!


----ராஜ்குமார் ராக்கர் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்