மகளிர் தின கவிதை சமூகத்தை காப்போம்

சமூகத்தை காப்போம்


மாதர் அனைவருக்கும் 
மகஎளிர் தினத்தில்  வாழ்த்துக்கள்  


கவிதை


மாதர் தம்மை அடிமை செய்யும் 
மடமையை கொளுத்துவோம் என 
மகாகவி பாரதி கூறினார் 
மகளிர் சிலர் இதனை 
மருந்தாக இல்லாமல் 
விருந்தாக பயன்படுத்துகின்றனர் 
விடுவேனா அவனை என்ற 
விடா கொண்டனாக 
வீட்டு சண்டையை 
வீணே பெரிதாக்கி  
வீதிக்கு கொண்டு வந்து 
வாழ்க்கையை தொலைக்கின்றனர்
   
ஆணுக்கு பெண் அடிமையில்லை 
அழுந்த சொல்வோம் நாம் 
ஆணும் பெண்ணுக்கு அடிமையும் இல்லை 
அறிந்தே நடப்போம் நாம்  


சிவனின்றி சக்தி இல்லை 
சக்தியின்றி சிவனில்லை என்ற 
சான்றோர் வாக்கினை 
சடுதியில் மறக்கின்றோரை  
சிந்திக்க வேண்டுகிறேன் 


ஆண்டவன் படைப்பில் 
அனைவரும் சமமே 
சம நிலை போயின் 
சகலமும் பாழே 
சற்றே சிந்திப்போம் 
சமூகத்தை காப்போம்


#மனதின் ஓசைகள்


 - மஞ்சுளா யுகேஷ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை