கொரோனா ஓர் எச்சரிக்கை

இரும பயம் தும்ம பயம்


பச்சை தண்ணீர் குடிக்க பயம்


பேரூந்தில் போக பயம் அதிலும் பேருந்து கம்பியை பிடிக்க பயம்


மருத்துவமனை போக பயம்


கூட்டம் கூடும் இடத்தில் நிற்க பயம்


யார் பேசினாலும் பயம் !


பணத்தை தொடக்கூட பயம்


! எல்லாம் எங்கும் பயம் எதிலும் பயம்


வழிபாட்டு தலங்களை விட்டுவைக்கவில்லை இந்த பயம்


மக்கள் பயத்தால் கோயில்கள் மூடல்


இந்த கொரோனா வந்ததால் தான்...


         வெற்றுக் கண்ணுக்கு கூட புலப்படாத ஒரு உயிரினம் ஒட்டு மொத்த உலகையும் அதன் பிரம்மாண்டங்களையும் ஆட்டம் காண வைத்திருக்கின்றது. சிந்தனை ஆற்றலோ, அறிவியலோ அறியாத இந்த நுண்ணுயிர்கள் அவ்வப்போது மனிதர்கள்தான் இப்பூமியின் கோலோச்சும் இனம் என்பதை நகைப்பிற்குள்ளாக்குகின்றன


        . எங்கிருந்து வருடா வருடம் இந்த வைரஸ்கள் மாத்திரம் புதுப் புது அவதாரமெடுத்து அணிவகுப்பு செய்கின்றன என்பது பலருடைய சந்தேகமாக இருக்கிறது. ஒரு வைரஸ் அதன் பாரம்பரிய இரகசியங்களை கொண்டிருக்கின்ற Genome இனை பாதுகாக்கவும், கடத்தவும் மட்டும்தான் தன் உடலை வைத்திருக்கும். அதற்கு ஏனைய அங்கிகளைப் போல வளர வேண்டும்


         , சாதிக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் கிடையாது. பக்டீரியாக்களுக்கு கூட இந்த வாழ்க்கை திட்டங்களும், அதற்கு தேவையான உடல் அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் இந்த வைரஸ்களோ எந்த திட்டங்களுமற்ற துறவிகள். தன் தொழிற்பாட்டிற்கு கூட ஒரு வைரஸ் இன்னோர் உயிர் கலத்தில்(Cell) தங்கியிருக்கும். ஓர் வைரஸினால் இன்னோர் அங்கி இல்லாமல் வாழ முடியாது. இந்த தேசாந்திரி வாழ்க்கைதான் வைரஸ்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். ஓர் கலத்தில் (Cell) நுழையும் வைரஸ் தன்னுடைய Genome இனை செலுத்தி அந்த கலத்தினை Hack செய்து சிட்டி ரோபோ போல தன்னை ஒத்த பல வைரஸ்களினை உருவாக்கிக் கொள்கின்றது


          . SARS-CoV வைரஸிற்கு மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஆற்றல் இல்லாமலிருந்தது. வைரஸ்கள் தங்களை மாற்றி Upgrade Versions ஆக வருவது அவற்றின் Evolution இல் சாதாரணமான ஒரு விஷயம்தான். நம்மோடு பரீட்சயமில்லாத உணவுச் சங்கிலியின் ஈற்றிலிருக்கும் காட்டு விலங்குகள் பலவற்றில் பல வைரஸ்கள் பல Versionsகளில் காணப்படும். ஆனால் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக் கூடிய Zoonotic Diseases என்கின்ற இந்த தொற்று நோய்களாக ஏன் இவை உருவெடுக்கின்றன என்றால் அதற்கான முக்கிய காரணம் உணவுச் சங்கிலியின் போக்கில் நாம் செய்கின்ற மாற்றம். அதாவது இயற்கையின் விதியில் நம்மை உண்ண வேண்டிய விலங்குகளை நாம் உண்ணுவது இயற்கைக்கு முரணானது.


         நம்மை சிங்கம் உண்ணும் வரை அதிலிருக்கும் நோய்க்காவிகள் மனிதனுக்கு மனிதன் பரவப் போவதில்லை. ஆனால் அதை எப்போது நாம் உண்டு உணவுச் சங்கிலியினை மாற்றி விடுகின்றோமோ அப்போது அதன் நோய்க்காவிகளையும் நாம் சுமந்து செல்ல வேண்டிய நிலை வருகின்றது. அந்த காவிகள் தங்களை மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவ ஏற்றவாறு தகவமைத்துக் கொள்கின்றன. கோரோனா COVID -19 வைரஸின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு தவிக்கும் உலகம் அதை முகம்கொடுக்க தன்னை தயார்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை.


             இயற்கை நியதிகளுக்கு அப்பால் இயற்கை மற்றும் செயற்கை அச்சுறுத்தல்களை தாங்கித்தணிக்கும் முன்னேற்பாடுகள் 21ம் நூற்றாண்டிலும் இல்லை !! ?? ஓர் வைரஸ் முழு உலகையும் நிலை குலையச்செய்திருக்கிறது. நவீன விஞ்ஞான மற்றும் மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உலகின் அதியுயர் தொழிநுட்ப வளர்சியை செல்லாக்காசாக்கி உலக பொருளாதாரத்தை குப்புறக் கவிழ்த்தியிருக்கும் கொரோனா மனிதன் மனிதனை கண்டு விரண்டோடும் மரண பீதியை உண்டாக்கி மனிதனை தன் இனத்திலிருந்து தனிமைப்படுத்தியிருப்பதும் தாங்கமுடியா அதிர்ச்சி.


                பேராயுதங்களின் இருப்பே பாதுகாப்பும் ஆரோக்கியமும் என குருட்டுப்புரிதலோடு உலகில் தமது ஆதிக்கத்தை நிலைகொள்ளச்செய்யவென போட்டிபோட்டுக்கொண்டு கொடிய அனு ஆயிதங்களையும் ஏவுகனைகளையும் கண்டுபிடிக்கத்துடிக்கும் வல்லாதிக்க நாடுகள் தம்மையும் உலகையும் கொடிய நோய் தாக்கங்களில் இருந்து தற்காத்துக்கெள்ளும் முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமையே இவ்விபரீதங்களுக்கு தக்க காரணமாகும்


            . கடந்த பல வருடங்களாய் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட அத்தனை கொடிய வைரஸ்களையும் கட்டுப்படுத்தும் எவ்வித மருந்துகளும் நவீன மருத்துவ உலகினால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே யாவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்


           . ஆக உலகம் தன்னை இன்னும் தயார்படுத்தவில்லை உயிர் கொள்ளும் ஆயுதம் தேவையில்லை உயிர்காக்கும் மருந்துகளே அவசியம். என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள கொரோனா ஓர் எச்சரிக்கை. சிந்திக்க..


--மஞ்சுளாயுகேஷ்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,