அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் கரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள்

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் கரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது :


     உலகமெங்கும் தற்போது கரோனா வைரஸ் பரவி பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து வருவதால் இன்று கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆண்டார் வீதியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக உலகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் சுபிட்சமாக எந்தவித நோய் நொடியும் இல்லாமல் நீடோடி சகல செல்வங்களும் பெற்று வாழ்வதற்காக சிறப்பு பூஜைகள்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்த கரானா வைரஸ் ஆனது பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அவர்களுக்கு பரவுவதாக சொல்கிறார்கள். ஆனால் அனைவரும் ஒன்றுதான் இங்கு பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு கிடையாது இந்த உலகத்தில் வாழ்கின்ற பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதான் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இன்று சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது


 


. இந்த பூஜையில் சங்கத்தின் தலைவர் அருள் வேலன் ஜி, பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன் ,ஆனந்த், விஸ்வநாதன் ,பொன் சங்கர், முரளி, தங்கதுரை, கருணாநிதி, பாலகுரு ,ரவி தினார்த் , மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் தலைவர் அருள் வேலன் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக முதல்வர் ஐயா எடப்பாடி அவர்கள் கரொனா வைரசை முன்னிட்டு தற்போது எடுத்து வரும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன பொது மக்கள் சார்பாகவும் அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாகவும் தமிழக முதல்வரும் அவரது அரசுக்கும் பாராட்டுகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.செய்தியாளர் முகிலன் கருர்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை