நியூசிலாந்து அணி வெற்றி தொடரையும் வென்றது


இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் : நியூசிலாந்து அணி வெற்றி, தொடரையும் வென்றது


2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எளிதில் வென்ற நியூசிலாந்து அணி, தொடரையும் 0-2 என்ற கணக்கில் வென்றது.


இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 242 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி  73.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அடங்கியது. 


 


 

அடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 46 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 132 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  இதையடுத்து, பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் இழந்தது. 

 

ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது நினைவிருக்கலாம். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியிருந்தது. 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,