பல்லாவரத்தில் இஸ்லாமியர்கள். மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்
குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி பல்லாவரத்தில் இஸ்லாமியர்கள். மூன்றாவது நாளாக தொடர் போராட்டம் விடுதலை சிறுத்தை கட்சியினர் நேரில் சென்று ஆதரவுஅளித்தனர்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி சென்னை வண்ணாரப்பேட்டை யில் இஸ்லாமியர்கள். தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதே போல இன்று மூன்றாவது நாளாக பல்லாவரம் மசூதி அருகே ஏராளமான பெண்கள் உட்பட இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்
போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை போலீஸ் தடையை மீறி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தேவ அருள் பிரகாசம் அவர்கள் கலந்து கொண்டு ஆதரவு அளித்து கண்டன உரையாற்றினார்.இதில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர் செய்தியாளர். மு. அமிர்தலிங்கம்
Comments