தண்டலச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ ,மாணவிகள் ஆர்பாட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே தண்டலச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டும், கல்லூரி விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவ ,மாணவிகள் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பாரதிதாசன் மாதிரி கல்லூரியில் கடந்த
இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்தும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்து தரக்கோரியும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதர வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments