கொரோனா  சிறப்பு செய்திகள்

 


கொரோனா  செய்திகள்


1.ஈரான் நாட்டில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் இன்று 63 பேர் பலியாகி உள்ளனர்.


2.இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது.


3.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


4.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்துள்ளது.


5.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்துள்ளது.


6.இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி நாடின் டோரிஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


7.அமெரிக்க என்ஜினீயருடன் தொடர்பில் இருந்தவர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


8.அமெரிக்க என்ஜினீயருடன் தொடர்பில் இருந்தவர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


9.இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 61 ஆக உயர்ந்துள்ளது.


10.டெல்லியில் கொரோனா பீதியில் ஹோலி கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.


11.கேரளாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு 31-ந்தேதிவரை விடுமுறை விடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டன.


12.தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளது.


13 .இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு


சென்னை: இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எரிச்சல் ஊட்டும் வகையில் விளம்பரம் இருப்பதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


14.
சென்னை : கேரளாவைப் போல தமிழகத்திலும் சினிமா தியேட்டர்கள் மூடி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா குறித்து காலர் டியூனை தமிழில் வெளியிட வேண்டும் என்றும் நோய் வந்தபிறகு சிகிச்சை அளிப்பதைவிட வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியம் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


15,


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாடு முழுவதும் பரவலாக இருந்து வருகிறது. எனவே, பக்தர்கள் தங்களுக்குத் தேவையான மாஸ்க் சானிடைஸர் போன்றவற்றை எடுத்து வருவது நல்லது.


இதையொட்டி வெளிநாடுகளிலிருந்து திருமலை திருப்பதி வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய வருபவர்கள், இந்தியாவுக்கு வந்து 28 நாள்கள் இருந்த பின் தங்களின் உடல் நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு திருப்பதிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.


தினமும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற ஒரு தலமாக திருமலை - திருப்பதி விளங்குவதால் வெளிநாடு வாழ் பக்தர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


16,கொரோனா வைரஸ் எதிரொலி: ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவு


17,துபாயில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


18,கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் எதிரொலி: உலக பொருளாதாரத்துக்கு ரூ.148 லட்சம் கோடி இழப்பு - ஐ.நா. கணிப்பு


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,