சிட்டுக் குருவி இனத்தைக் காப்போம்

கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


''கடந்த சில ஆணடுகளாக நாட்டில் சிட்டுக்குருவி இனம் விரைவாக அழிந்து வருகிறது.



நீலகிரி மாவட்டம் கூடலூரில் பழங்குடியின பள்ளி மாணவர்கள் சிட்டுக் குருவி இனத்தைக் காக்க சிட்டுக்குருவிகளுக்குப் பாதுகாப்பான சிறப்பு கூடுகளை  ஏற்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக தங்களது பள்ளியை சிட்டுக்குருவிகளின் வாழ்விடமாக மாற்றியுள்ளனர்.


      இந்த சிட்டுக்குருவியை காண்பித்து தாய் தன் பிள்ளைக்கு ஒரு காலத்தில் சோறு ஊட்டி வந்தாள். ஆனால், இந்தப் பறவையை இன்றைய குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வீட்டில் சிறைபிடித்து வளர்த்து வந்தவர்களும் உண்டு. அப்போதெல்லாம், சுதந்திரமாக பறக்க வேண்டிய பறவையை சிறையில் அடைத்து சித்ரவதை செய்கின்றனர் என்று மனம் ஏங்கும். ஆனால், இனிமேல் அப்படி நினைக்காமல் நாம் அனைவரும் இணைந்து இந்தப் பறவை இனத்தைக் காக்க முன் வர வேண்டும். சின்ன குடில் அமைத்து, கூண்டு அமைத்து சிட்டுக் குருவி வளர்த்து வந்தால், அதன் மூலம் இனப்பெருக்கம் ஏற்படும்.


 வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு பலியாகி வரும் இந்த சிட்டுக் குருவி இனத்தைக் காப்போம் என்று இந்த நாளில் நாம் சூளுரைப்போம்.


செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் இந்த சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக பறவைகள் நல ஆர்வலர்களும், சிட்டுக் குருவி விரும்பிகளும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்லஅனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையை பெற்றுள்ளனஆனால்மனிதனின் சுயநலத்துக்காக மிருகங்களையும்பறவை இனங்களையும் அழித்து வருகிறோம்.


  இப்போது மனிதன கொடிய கொரனா நோயினால் அழிந்து வருவதைக் கண்ணெதிரே காண்கிறோம். 


--செ .ஏ. துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,