கொரொனா செய்திகள்
*கொரோனா பாதிப்பு: மார்ச் 31 ஆம் தேதிக்குள் சரியாகிவிடும் என்பது அரசின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை -அமைச்சர் விஜயபாஸ்கர்*
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர். அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மார்ச் 31ஆம் தேதிக்குள் எல்லாம் சரியாகிவிடும் என்பது அரசின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை.
முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு விமான பயணிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில்களில் பயணம் செய்வதை 2 வாரத்துக்கு பொதுமக்கள் தவிர்க்கவும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற காஞ்சிபுரம் பொறியாளர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்
குணமடைந்து நலமுடன் திரும்பிய நபர் குறித்து மற்ற விவரங்களை கேட்க வேண்டாம் என தெரிவித்தார்.
Comments