காரடையான் நோன்பு படையல்

காரடையான் நோன்பு


*காரடையான் நோன்பு
14.03.2020 சனிக்கிழமை
காலை 10.45 - 11.30 க்குள்
அனுஷ்டிக்க வேணும்🙏🏼


சத்யவான் சாவித்ரி கதை தான் இதன் பின்னோடி


"உருகாத வெண்ணையும் ஓர் அடையும்


நான் தருவேன்


ஒருநாளும் என் கணவர் எனைப்பிரியாது


இருக்கும் வரம் தா "


வேண்டிக்கொண்டு செய்யுங்கள். பிரியாத கணவன், அன்பு மாறாது நெஞ்சில் கொண்டு வாழ வேண்டும் . நம்பி செய்யுங்கள் . எல்லாம் நலமாகும் .


கடையில் கிடைக்கும் புட்டு மாவு,/கொழுக்கட்டை மாவு கொண்டு செய்யலாம். கொஞ்சமாய் விவரம் தருகிறேன் . உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம்


உப்பு அடை: 


சற்று சூடு ஆகும்வரை வறுத்தால் போதும். ஒரு கப் மாவு /இரண்டு கப் தண்ணீர். வேகவைத்த வெள்ளை காராமணி. தேங்காய் சிறு துண்டுகள் /தாளித்து /தண்ணீர் கொதிக்க தேவையான உப்பு, சிறிது பெருங்காயம் சேர்த்து -மாவு கொட்டி கிளறி பின் ஆவியில் 12 -15 நிமிடம் வேக விடவும்.


வெல்ல அடை;


மாவை சிவக்க வறுக்க வேண்டும் ஒரு கப் மாவு முக்கால் கப் வெல்லம். தண்ணீரில் கரைந்து வடிகட்டி, ஒரு கொதி வந்தால் போதும். மாவுசேர்த்து கிளறி, வேகவைத்த காராமணி ,தேங்காய் துண்டுகள் , ஏலக்காய் தூள் சேர்த்து பின் ஆவியில் 12 -15 நிமிடம் வேக விடவும்.


இறைவனுக்கு படைத்து, வெண்ணெயுடன் சாப்பிட அற்புதமாய் இருக்கும். 


அருகே பசு மாடு இருந்தால், ஒன்றிரண்டு அடை கொடுங்கள் .


--மஞ்சுளா யுகேஷ் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,