மகளிர் தினம் கவிதை கடவுள் அறியாத பதில்
கடவுள் அறியாத பதில்
கவிதை
கடற்கரையின் பாறையில்
வந்தமர்ந்த கடவுளிடம் கேட்டேன்
‘முதுமை படர்ந்த பின்னும்
தீர்ந்து போகாத.
தளிமையை உணரச்செய்யாத
காதலைத் தரும் ஓர் ஆணை
என் வழித்தடத்தில் காட்டிவிட்டுப் போ’ என.
பிட்டத்தைத்தட்டிக் கொண்டபடி
எழுந்து போன கடவுள்
புள்ளியாய் மறைந்து போனான்/
-மனுஷி
ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள் கவிதை தொகுப்பிலிருந்து
நன்றி
Comments