திருத்துறைப்பூண்டியில் வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி
திருத்துறைப்பூண்டியில் வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி சென்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்பகுதிகுட்பட்ட ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் நகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரோனா வைரஸ் பரவும் இடங்களான கூட்ட நெரிசல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம், சுத்தமாக கைகளை வைத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நிறைவடைந்தது .
பேரணியின்போது நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments