மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும்

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்க கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


 


 


மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். கண்ணன், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சின்னதம்பி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், மாநிலக்குழு ராமதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடலோர கிராமங்களில் வசித்துவரும் மீனவர்களுக்கு குடிமனையும், பட்டாவும் வழங்க வேண்டும், உள்நாடு மீன் வளர்ப்போருக்கு ஆண்டுதோறும் வழங்கக்கூடிய கரைகள் புணரமைப்பு செய்வதற்கான தொகையை உடனே வழங்க வேண்டும், மீனவர்களுக்கு வழங்கக்கூடிய மீனவர் அடையாள அட்டை காலதமாதமின்றி வழங்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும், மீனவத் தொழில் புரியும் அனைவரையும் மீனவ கூட்டுற சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும், துளசேந்திரபுரம் கிராமத்திலுள்ள சுமார் 240 ஏக்கர் கொண்ட வடக்கு ஏரியை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், உள்நாட்டு மீன்வளர்ப்பு பன்னை குளங்களுக்கு அரசு காப்பீட்டு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 27.03.2020 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி