குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்திதொல் திருமாவளவன்  சிறப்புரை

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி பல்லாவரம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் பல்லாவரம் மசூதி சாலையில் 16வது நாளாக இஸ்லாமிய பெண்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்திற்க்கு ஆதரவு தரும் வண்ணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சிறுவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை போல் வேடமிட்டு மக்கள் விரோத சட்டத்திற்கு  எதிராக அவர்கள் பேசுவது போல் நடித்து காண்பித்தனர்.பின்பு இஸ்லாமிய பெண்கள் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தினால் பின் வரும் பாதிப்புகளை அகதிகள் முகாம் அமைத்து என்று நடித்து விளக்கி காண்பித்தனர்.
இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தேவ அருள் பிரகாசம்,இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் 
பம்மல் நிசார் அகமது மாநில தொண்டரணி துனை செயலாளர் காஞ்சி அனிபா , அப்துல் ரஜாக், ஜாகிர் உசேன்,  ஆகிய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள்  இஸ்லாமிய இயக்கத்தினர் என  ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.


 


 


செய்தியாளர். மு அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை