திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவில் கோவிலுக்கு வந்த இரண்டு பெண்களிடம் தாலி செயின்பறிப்பு

பிரதோஷ விழாவில்பரபரப்பு.


திருத்துறைப்பூண்டி மார்ச்: 8
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவில் கோவிலுக்கு வந்த இரண்டு பெண்களிடம் தாலி செயின்பறிப்பு கோவிலுக்கு வந்த அனைவரிடமும் போலீசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு.


 



திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு நடைபெறும் இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிவனை மற்றும் நந்திபகவானைவழிபட்டு செல்வது வழக்கம்


சனி பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர் . பிரததோஷ வழிபாடு நிறைவுபெற்று தீபராதனை நடைபெற்றபின் அனைவருக்கும் வெண்பொங்கல் அல்லது  புளிசாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்படும் அதில் வரிசையாக நின்று பிரசாதம் பெற்றுச் செல்வார்கள் நேற்று அப்படி பிரசாதம் பெறுவதற்கு வரிசையில் நின்றபோது முண்டியடித்துக்கொண்டு பிரசாதம் வாங்க சென்ற  இரண்டு பெண்களின் தலா 4 பவுன் தாலி செயினை யாரோ அறுத்துச் சென்றுவிட்டனர் தாலி செயினை பறிகொடுத்தவர்கள் சத்தம் போட்டு கத்தியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர் இதையடுத்து கோவிலுக்குள் இருந்த அனைவரையும் கோவில் வளாகத்தில் உள்ள திருமண பண்டபத்தில் அடைத்து வைத்து பெண் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர் போதிய போலீசார் இல்லாததால் பெண்களிடம் சோதனையிடுவது காலதாமதம் ஏற்படுவதால் அப்பகுதி முழுவதும் ஒரே பரபரப்பாக உள்ளது.
 அனைவரையும் வெளியே விடாமல் சோதனை மேற்கொள்வதுடன் சிசிடிவி கேமராவையும் போலீசார் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதோஷ காலங்களில் அதிகமான  கூட்டம் வரும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது இல்லை போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் இதுபோன்ற சம்பவம் பிரதோஷ நாளில் நடைபெற்றுள்ளது என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போது இந்த சம்பவம் கோவிலுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது என்று பக்தர்கள் புலம்பி வருகின்றனர்.
 இதனால் திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,