கழுவும் மீன்களில் நழுவும் மீன்


  நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் நேற்று சென்னையில் நடந்த மீட்டிங்தான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பு ஆனால் இன்னொரு பக்கம் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை, ரஜினி கட்சி தொடங்குவதே சந்தேகம்தான். அவர் அதைதான் ஏமாற்றம் என்று சூசகமாக சொல்லி இருக்கிறார் என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கிறது
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நிறைய விவாதங்களை ஏற்படுத்தியது


நேற்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். கூட்டம் நன்றாக சென்றது. அரசியல்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை. தனிப்பட்ட ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன், என்று குறிப்பிட்டார்


அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த் எந்த ஒரு பேட்டியையும் தெளிவாக அளிக்கவில் ஒவ்வொரு பேட்டியிலும் எதையாவது ஒன்றை சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்துஓடி விடுவார் 


 இந்த நடுத்தெரு பிரஸ்மீட்தான் அத்தனை மீடியாவிலும் விவாதப் பொருளாகி கல்லா கட்டும்.  இதனைவைத்தே லைம் லைட்டில் தொடர்ந்து இருக்கலாம் என்பது கூட ரஜினிக்கு  யாரோ சொல்லிக் கொடுத்த ஐடியாபோல அதனால்தான் ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் ஒரு புதிர் பேச்சை இடம்பெற வைத்துவிடுவார் 


இதே பாணியைத்தான் சென்னையில் நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பிலும் வெளிப்படுத்தினார் ரஜினிcமக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனையின் போது ஒரு விஷயம் ஏமாற்றமாக இருந்தது என பொடி வைத்து நழுவினார் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,