தலனா எப்பவும் வித்தியாசம். இப்போ தலை கூட

*ஐபிஎல் காய்ச்சல் ஆரம்பம்: புதிய சிகை அலங்காரத்துடன் சென்னை வந்திறங்கினார் தோனி


மார்ச் 3-4 தேதிகள் முதல் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார் தோனி. இப்பயிற்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்திறங்கியுள்ளார் தோனி. புதிய சிகை அலங்காரத்துடன் உள்ள தோனி, சென்னைக்கு வந்தது குறித்த விடியோவை சென்ன சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மேலும் பியூஷ் சாவ்லா, அம்பட்டி ராயுடு உள்ளிட்ட சில வீரர்களும் தோனியுடன் பயிற்சியில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்துள்ளார்கள்.


மார்ச் 29 முதல் ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.


ஐபிஎல் போட்டியில் ஒரு வீரரின் பயிற்சியைக் காணவே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரள்வது தோனிக்கு மட்டும்தான். சென்னை சேப்பாக்கத்தில் கடந்த இரு ஐபிஎல் சீசன்களாக தோனி பயிற்சி பெறுவதை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளார்கள். இந்தமுறையும் தோனி பயிற்சி எடுத்துக்கொள்வதைக் காண ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இரு வாரங்கள் பயிற்சியில் ஈடுபடும் தோனி பிறகு சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.மார்ச் 19 முதல் தொடங்கவுள்ள பயிற்சியில் சிஎஸ்கேவின் அனைத்து வீரர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள்.வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி