தியானம் செய்வதால் என்ன நன்மை

தியானம் செய்வதால் என்ன நன்மை?


           தியானம் செய்வதனால் உடலில் ஏற்படுகின்ற கோபம், ஆணவம், பிடிவாதம், பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம்மை நிம்மதிபடுத்துகின்றன. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது


          . உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். வட திசையும், கிழக்கு திசையும் சிவனாகவே கருதப்படுவதால், இத்திசைகள் சிறப்பானவை. எனவே கிழக்கு, வடக்கு என இரு திசைகளைப் பார்த்தே தியானம் செய்ய வேண்டும்.


             வடதிசையில் வீசும் காந்தக் கதிர்கள் மூளையை பாதிப்படைய செய்யும் என்பதால், அத்திசையில் தலை வைத்து தூங்கவோ, உணவு உண்ணவோ கூடாது. தியானம் செய்தால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம். ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரித்து, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது, அலைபாயும் மனம் அமைதியடைகிறது, சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது,நோய் இன்றி பெரு வாழ்வு கிடைக்கிறது, மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது,உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது. பொறுமை,


           விடாமுயற்சி தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி


---மஞ்சுளாயுகேஷ்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,