தோழமை சிறுகதை

தோழமை


 (சிறுகதை)


 ஏங்க உங்க பொண்ணு சொல்றதைக் கேளுங்க அவ ஸ்கூலுக்குப் போகணுன்னா மொட்டை போட்டுகிட்டுத்தான் போவாளாம் காலையில் இருந்து ஒரே அடம் 


 என்னடாம்மா ஏன் அப்படி சொல்றே ?


ப்ளீஸ் பா.... காரணம் கேட்காதே எனக்கு மொட்டை போட்டுவிடுங்க ....


என்னடி விளையாடுறியா எவ்வளவு நீளமாஇருக்கு தலைமுடி..... மகளின் அழுகைக் கண்டு மனம் கேட்காமல் முரளி மனைவியைச் சமாதானப்படுத்திவிட்டு மொட்டை போட்டு கூட்டிவந்தவன் மகள் இதுநாள் இல்லாமல் இன்று மிகவும் சந்தோஷமாக பள்ளிக்கு கிளம்புவதைக் கண்டு யோசனையுடன் அவனே அழைத்துச் சென்றான். 


பள்ளியின் கேட் அருகே நின்ற பையனைக் கண்டதும் வாடா கணேஷ் நாம கிளாஸூக்குப் போகலாம் என்று தோள் மேல் கைபோட்டு அழைத்துச் சென்றவள் முரளிக்கு கையசைத்து விட்டுப் போனாள்.



கண்கள் பனித்தபடி அந்த பையனின் அம்மா அருகில் வந்து ரொம்ப நன்றி ஸார், வேதனைகளைக் கூட வேடிக்கையா பார்க்கிற சமூகம் இது ஆனா உங்க சைந்தவிக்கு ரொம்ப பெரிய மனசு. எம் பையனுக்கு கேன்சர் இப்போ சரியானாலும் ட்ரீட்மெண்ட்டால தலையில முடியெல்லாம் கொட்டிப்போய்....ஸ்கூல்லே எல்லாரும் கிண்டல் பண்றாங்க டீச்சர்கிட்டே சொல்லிட்டுப் போகலான்னு வந்தேன். அப்போ உங்க பொண்ணு நானும் மொட்டை போட்டு வர்றேன்டா அப்பறம் யாரு கிண்டல் பண்றான்னு பார்ப்போன்னு எம் பையனோட கண்ணீரைத் துடைச்சா... ஸ்கூலுக்கு கிளம்பவே பயந்த பையன் இன்னைக்கு தைரியமா கிளம்பி வந்தான்னா அதுக்கு காரணம் உங்க சைந்தவி. மீண்டும் ஒருமுறை கைகூப்பிவிட்டு நகர பேசுவதறியாமல் தன் மகளின் பெருந்தன்மையை நினைத்து மெய் மறந்து நின்றான் முரளி


 


--கமலகண்ணன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,