மக்கள் உறுதியாக கடைபிடிக்க வேண்டும் உணவுத்துறை அமைச்சர் திரு காமராஜ் அவர்கள் திருத்துறை பூண்டியில்

           உலகத்தை அச்சுறுத்தும் கரோனாவைரஸ் தமிழகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக முதல்வர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் பொருட்டு  144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக பாரத பிரதமர் 21 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்கிற உத்தரவை வெளியிட்டிருக்கிறார். இதனை மக்கள் உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வரும் தெரிவித்து வருகிறார்


              . அதனையே நான் வேண்டுகோளாக வைக்கிறேன்.நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கு நம்முடைய உயிரை  நம்முடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுடைய உயிரை பாதுகாப்பதற்கு நம்மை நாம் பாதுகாத்து கொள்ள நாம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை அத்தனை பேரும் உணரவேண்டும் இந்த கரோனாவை ஸ் நோயை பார்த்து அச்சப்படத்தேவையில்லை என்ற நிலை எப்போது இருக்கும் அதனை நாம் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்தும் போது நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொண்டால் வெல்லலாம் என்ற நிலை ஏற்படும் அந்த நிலையை அடைய கட்டுப்பாடுகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.திருமா வட்டத்தில் இதுவரை 905 பேர் அவரவர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் இவர்கள் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் கண்டறியப்பட்டு வருகிறார்கள் அவர்களையும் வீட்டிலேயே தங்க வைத்து அவர்களுக்கு உரிய உணவுக்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டதில் 144 உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற 144 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. வீடுகளிலேயே இருந்து தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை மீறி வெளியே சென்ற 5 பேர் மீதும் வழக்கு தொடரடப்பட்டுள்ளது. நம்மைநாம் பாதுகாப்பாகவைத்துக் கொள்ள சுயகட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் அத்தியாவசிய உணவு உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில் எந்தவித தங்குதடையும் இருக்காது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை பதுக்குவது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது என்ற எண்ணங்கள் யாருக்கும் வரக்கூடாது அப்படி கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்தால் அல்லது பதுக்க நினைத்தால் அவர்கள் மீது பிளாக் மார்க் கள்ளச்சந்தை விற்பனை சட்டம் பாயும் எந்த காரணத்தை கொண்டும் அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்க கூடாது. இதை தடுக்க மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குரிய ரேஷன் பொருட்கள் மக்கள் பெற்றுச் சென்றுவிட்டனர் வாங்காதவர்களுக்கு கொடுப்பதற்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு கடைகள் முன்பு கட்டம் போட்டு வரிசையில் நின்று சில நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதனை கட்டாயப்படுத்தவில்லை சோசியல் டிஸ்டன்ஸ் பின்பற்ற வேண்டும்.நம்மை சமூதாயத்தை, நமது ஊரை பாதுகாத்துக்கொள்வதற்கு நமது ஒவ்வொருடைய கடமை கட்டுப்பாடு இல்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பாரபட்சம் பார்க்க முடியாது உச்சபட்சம் உயிர்தான் அதற்கான பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் திரு காமராஜ் அவர்கள் திருத்துறை பூண்டியில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த போது  தெரிவித்தார்


.செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,