அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா
*அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில்* *உள்ள மணி கூண்டு அருகே நடைபெற்றது.*
*இதில் கழக* *பொதுச்செயலாளர் TTV தினகரன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.இதில் கழக முக்கிய நிர்வாகிகள் வெற்றிவேல்,சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்*
*பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:*
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்
இந்த கூட்டணி மிக வலுவாக அமைந்து மாபெரும் வெற்றி பெறும் என்றும்
அமமுக வுக்கு சின்னம் மிக விரைவில் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கும் என்றார்.
மேலும் சசிகலா அவர்கள் மிகா விரைவில் சிறையில் இருந்து வெளிவர சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்
அவர் வெளியில் வந்த பிறகு எங்களுடன் தான் இருப்பார்
ரஜினியின் கட்சி கொள்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து ஆகவே நாம் தலையிடுவது சரியாக இருக்காது அவர்
வடிவேலு மிகப்பெரிய ஒரு நகைச்சுவை நடிகர் ஆனால் அவர் தற்போது ஒதுங்கி இருக்க காரணம் தற்போது தமிழகத்தில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வந்துள்ளார்கள் என்பதே காரணம் பல்வேறு அமைச்சர்களை சுட்டிக்காட்டி பேசினார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு
ஒன்று ஆர்.கே.நகர் மற்றொன்று எது என முடிவு செய்யவில்லை என்றார்
*பேட்டி:டி.டி.வி.தினாகரன்,பொதுச்செயலாளர்,அமமுக.*
Comments