1.கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2.இத்தாலியில் கொரோனாவால் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளை கண்டித்து சிறைச்சாலைகளில் போராட்டம் நடத்தப்படுகிறது.இதனை பயன்படுத்தி பல கைதிகள் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
3.
டெல்லியில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி- கல்லூரிகள் - திரையரங்குகள் மூடல்
கொரோனா எதிரொலியால் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
4.கொரோனா குறித்த பயத்திற்கு நோ சொல்லுங்கள் முன்னெச்சரிக்கைக்கு யெஸ் (ஆம்) சொல்லுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5.கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது ஒரு "கவலைக்குரிய விஷயம்" என்று வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
6.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விசாக்கள் ஏப்ரல் 15 வரை மத்திய அரசால் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
7.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தாலியின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
8.கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதில் கவனம் செலுத்துவோம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறினார்.
9.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் டாம் ஹாங்க்ஸ் பதிவிட்டுள்ளார். டாம் ஹாங்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், ``ஹலோ நண்பர்களே... ரீட்டாவும் நானும் ஆஸ்திரேலியா வந்தோம். நாங்கள் சோர்வாக உணர்கிறோம். ஜலதோஷமும் உடல் வலியும் இருக்கிறது. கொஞ்சம் காய்ச்சலும் இருக்கிறது.
இதனால் இருவரும் கொரோனா வைரஸுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டோம். இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவோம். மீண்டும் பரிசோதனைகள் செய்யப்படும். பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்காகத் தனிமைப்படுத்தப்படுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்
10.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,169 ஆக உயர்ந்துள்ளது.
11.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக எந்த அச்சமும் தேவை இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்
12.
தென் கொரியாவில் நேற்று மட்டும் புதிதாக 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 அதிகரித்து உள்ளது.
வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
12.கொரோனா வைரஸை விட வதந்திகள் வேகமாக பரவுகின்றன என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
13.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
14.
அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 28 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
எனினும், இங்கிலாந்துக்கு இந்த தடை பொருந்தாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், கொவிட் -19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் இருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தவறியதால், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தார். வாஷிங்டன், பிரான்சிஸ்கோவில் பொது நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் பொதுச் சுகாதார அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
15.
பயண விவரங்களை மறைப்பது குற்றமாக கருதப்படும்; கேரள அரசு எச்சரிக்கைபயணிகள் தங்களின் பயண விவரங்களை மறைத்தால் அது குற்றமாக கருதப்படும் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
16.காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல்காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதியில் சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்
17.சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் முறையாக கடந்த டிசம்பர் மாதம் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3,136 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 80,753 -பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கென கட்டப்பட்ட 16 தற்காலிக மருத்துவமனையை மூட சீன அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹூபே மாகாணத்தின் வுஹானில் அமைக்கப்பட்டிருந்த 2 தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து மொத்தம் 16 தற்காலிக மருத்துவமனைகளை அரசு மூடியுள்ளது.
Comments