மகளிர் தின செய்தி மோடியின் டுவிட்டரை கையாளும் தமிழகப் பெண்:

மோடியின் டுவிட்டரை கையாளும் தமிழகப் பெண்:மோடியின் டுவிட்டரை கையாளும் தமிழகப் பெண்: அதிரடி ரிப்ளையில் அசத்தல்


புதுடில்லி: பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை கையாளும் 7 பெண்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ், பாஸ்வேர்டு கேட்ட பயனருக்கு அதிரடியாக ரிப்ளை செய்தது நெட்டிசன்களிடையே பாராட்டை பெற்றது.


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி முன்பு அறிவித்தபடி, தனது டுவிட்டர் கணக்கை 7 பெண் சாதனையாளர்களிடம் ஒப்படைத்தார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நான் ஏற்கனவே கூறியது போல், சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறிவிட்டேன். இன்றைய நாள் முழுவதும் 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த தகவல்களை என்னுடைய சமூக வலைதளம் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள், உரையாடுவார்கள், எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.


இதனையடுத்து, அவரது டுவிட்டர் கணக்கை கையகப்படுத்திய 7 பேர்களில் தமிழகத்தை சேர்ந்தவரும் ஒருவராவார். சென்னையை சேர்ந்த சமூக சேவகி சினேகா மோகன்தாஸ், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இவர், மோடியின் டுவிட்டர் கணக்கில் பதிவிடப்போவதாக அறிவித்திருந்தார். இதற்கு பயனர் ஒருவர், மோடியின் டுவிட்டர் பாஸ்வேர்டை கேட்டு ரிப்ளை செய்தார். இதற்கு மோடியின் கணக்கில் இருந்து உடனடியாக பதிலளித்த சினேகா, 'புதிய இந்தியா, உள்ளே நுழைய முயற்சிக்கவும்,' என புத்திசாலித்தனமாக பதிவிட்டார். சினகாவின் அதிரடி ரிப்ளேயை நெட்டிசன்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்