ஆட்சியை பிடிக்கத்தான் கட்சி நடத்துகிறோம் அன்புமணி
தமிழகத்தில் இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் - பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
வேறு கட்சி ஆட்சி நடத்த தாங்கள் கட்சி நடத்தவில்லை என்றும், ஆட்சியை பிடிக்கத்தான் தாங்களும் கட்சி நடத்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
மேலும், தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் தான் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும், ஒரு பைசா செலவில்லாமல் உயர்கல்வி வரை படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அன்புமணி கூறியுள்ளார். இதேபோல் செலவின்றி தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க தன்னிடம் பல நல்ல திட்டங்கள் உள்ளதாகவும் அன்புமணி கூறி வருகிறார். இலவச கல்வி, செலவின்றி மருத்துவம் ஆகிய இரு முழக்கங்களும் இளைஞர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் கட்டணம் கட்ட முடியாமல் சிரமப்படும் நிலையில் அன்புமணியின் உறுதி இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது.
Comments