தமிழ்நாட்டிலுள்ள  இந்துத் திருக்கோயில்கள் தொடர் ஒரு முன்னோட்டம்


 
     இரண்டு உலக மகா யுத்தங்களைக் கண்ட கடந்த நூற்றாண்டைத் தொடர்ந்து கண்ணுக்குத் தெரியாத  கொடிய தொற்று மூலம் மூன்றாவது யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.  இரண்டு யுத்தங்களிலும் உலக நாடுகள் அணி திரண்டு, கண்ணுக்குத்  தெரிந்தவர்களுடன் போரிட்டன. 


              ஆனால் தற்போது எந்தத் தனிப்பட்ட நபருடனும் போராடாமல், ஒரு நோயுடன், எப்படி மீள்வது என்று வழி தெரியாமல்  போரிடுகின்றோம்.  இதில் யாருமே யாரையுமே குறை சொல்ல முடியாத அளவு உயிரை விரைந்து பறிக்கும் அந்தத் தொற்றானது உலகம் முழுமையையுமே ஆட்டிப் படைக்கும்போது, மனிதர்கள் கொத்து கொத்தாக செத்து மடியும்போது, உலகப் பொருளாதாரமே முழு அளவில் முடங்கிக் கிடக்கும்போது, பட்டினியால் பலர் மரணத்துடன் போராடும்போது, எண்ணிப் பார்க்கமுடியாத தொலைதூரம் சொந்த ஊருக்கு நடைப்பயணம் மேற்கொண்டு உயிரை விடும் செய்திகளைக் கேட்கும்போது, அனைத்து மத திருக்கோயில்களும் மூடப்பட்டு, வேறு பொழுதுபோக்கிற்கோ, கற்றலுக்கோ வழிதெரியாமல் வீட்டிற்கு வெளியே தலைகாட்ட முடியாத வகையில்   வீட்டில் தனிமையில் இருக்க  வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு,  மனதளவில்  பெரும் பாதிப்புள்ளாகாமல் இருக்க எவ்வளவோ வழிகள் உள்ளன என தொலைக் காட்சிகளில் தெரிவிக்கப்படும்போது


                         மக்கள்  தெரிந்து கொள்ளட்டுமே  என்ற எண்ணத்தில்  அவ்வப்போது சில தகவல்களை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை  அளித்த என் பெற்றோர்களுக்கும்,  என்னை ஆளாக்கிய  ஆசிரியப் பெருமக்களுக்கும்   இந்த இணைய தள ஆசிரியர் திரு. என்,எஸ், உமாகாந்தன்   அவர்களுக்கும்  தகவல்களைப் படித்து, கருத்துக் களைத் தெரிவித்த அனைத்து  வாசகர்களுக்கும்  என் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் ஏனையோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும்  இத்தருணத்தில் தனிமையிலிருந்து விடுதலை கிடைக்கும்பாது கண்ணுக்குத் தெரியா நோயிலிருந்து விடுபடும்போது, அன்றாட வாழ்க்கை சாதாரண நிலைக்கு மாறும்போது, கோயில்கள்அனைத்தும் திறக்கப்படும்போது தேவைப்படுமே என்ற நினைப்பில் மேலும் பல தகவல்களைத்  தங்களுக்குத் தெரிவிக்கக  தமிழ்நாட்டிலுள்ள  இந்துத் திருக்கோயில்கள் பற்றி சில  விவரங்கள் அளிக்க முற்படுகிறேன்.   


என் எளிய பணி  மேன்மேலும் தொடர உங்களுடைய நல்வாழ்த்துக்களை எதிர்பார்க்கும்  சாமானியன்.


 


தங்கரதம் உள்ள திருக்கோயில்கள்


1.     அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழநி


2.     அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பூங்காநகர், சென்னை


3.     அருள்மிகு வடபழனியாண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை  


4.     அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி.


5.     அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு


6.     அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில், சுவாமிமலை


7.     அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில்


8.     அருள்மிகு விநாயகர்  திருக்கோயில், ஈச்சநாரி, கோயம்புத்தூர்.


9.     அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்.


10.                        அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை


11.                        அருள்மிகு  சங்கரநாராயணசுவாமி திருக்கோயில்,  


         சங்கரன்கோயில் 


12.                         அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்.


13.                        அருள்மிகு வானமாமலைப் பெருமாள் திருக் கோயில்,  நாங்குநேரி (சப்பரம்)  


14.                        அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்,  காஞ்சிபுரம்.


15.                        அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், இரத்தினகிரி


16.                        அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  திருக்கோயில், சிவன்மலை.  


17.                        அருள்மிகு கபாலீஸ்வரர்  திருக்கோயில், மயிலாப்பூர்.  


18.                        அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், மாங்காடு  


19.                        அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்  


20.                        அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர்.


21.                        அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  திருக்கோயில், மருதமலை.  


22.                        அருள்மிகு  பண்ணாரி மாரியம்மன்   திருக்கோயில், பண்ணாரி.  


23.                        அருள்மிகு அருணாச்சலேஸ்வரர்  திருக்கோயில், திருவண்ணாமலை


24.                        அருள்மிகு மருந்தீஸ்வரர்  திருக்கோயில், திருவான்மியூர், சென்னை.  


25.                        அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், திண்டல்மலை, ஈரோடு.  


26.                        அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி  திருக்கோயில், அடையாறு, சென்னை


27.                        அருள்மிகு கருநெல்லிநாதசுவாமி திருக்கோயில், திருத்தங்கல், சிவகாசி.  


28.                        அருள்மிகு முண்டககண்ணியம்மன்  திருக்கோயில், மயிலாப்பூர்.  


29.                        அருள்மிகு வேங்கடாஜலபதி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், கும்பகோணம்.


30.                        அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  திருக்கோயில், திருப்பரங்குன்றம்.


31.                        அருள்மிகு மாரியம்மன்  திருக்கோயில், கரூர்.


32.                        அருள்மிகு தண்டுமாரியம்மன்  திருக்கோயில், கோயம்புத்தூர்.


33.                        அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில், ஓசூர்.  


34.                        அருள்மிகு அகிலோண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர்  திருக்கோயில், சமயபுரம்.


35.                        அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், நாமக்கல்  


36.                        அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  திருக்கோயில்,  பச்சைமலை,  கோபிசெட்டிபாளையம்.


37.                        அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அரியாக்குறிச்சி.


                


38.                        அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன்  திருக்கோயில்,  திருநெல்வேலி.  


39.                          அருள்மிகு கண்ணுடைய நாயகியம்மன்  திருக்கோயில்,  நாட்டரசன்கோட்டை, சிவகங்கை.


40.                        அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்  திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல்.  


41.                        அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி.


42. அருள்மிகு சுகவனேஸ்வரர்  திருக்கோயில், சேலம்.


43. அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம்.


44. அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோயில், மதுரை.


              


45. அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர்.  


46. அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை.


47. அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்.


48. அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனூர், விழுப்புரம்.


49. அருள்மிகு கொண்டத்து காளியம்மன்  திருக்கோயில், பாரியூர், ஈரோடு.


50. அருள்மிகு கந்தசுவாமி  திருக்கோயில், திருப்போரூர், காஞ்சிபுரம்.


51. அருள்மிகு மாசாணியம்மன்  திருக்கோயில், ஆனைமலை, கோயம்புத்தூர்.  


52. அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி  திருக்கோயில்,  பண்பொழி, திருநெல்வேலி. 


53. அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில்,  திருவில்லிபுத்தூர்.


54. அருள்மிகு அடைக்கலாம் காத்த அண்ணனார் மற்றும் பத்ரகாளியம்மன்  திருக்கோயில், மடப்புரம், சிவகங்கை.


55. அருள்மிகு தான்தோன்றீஸ்வரர்  திருக்கோயில், பேளுர், சேலம்.  


56. அருள்மிகு பாலதண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், சுக்கிரவாரப்பேட்டை, கோயம்புத்தூர்.


57. அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சிவகாசி, விருதுநகர்.


58. அருள்மிகு ஆமருவிப்பெருமாள் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்.  


59. அருள்மிகு பூங்கா முருகன் திருக்கோயில், தல்லாக்குளம், மதுரை.


60. அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி  திருக்கோயில், விருதுநகர்.  


61.  அருள்மிகு சண்முகநாதசுவாமி  திருக்கோயில், குன்றக்குடி (கேடகம்/சப்பரம்).


62. அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை


63. அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள்  திருக்கோயில், நாகப்பட்டினம்,  


64. அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், மண்டைக்காடு, கன்னியாகுமரி. 


 செ .ஏ   .துரைபாண்டியன்          

 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை