ரூ.1 கோடியை நெருங்கும் அபராதம் வசூல்

ஊரடங்கு மீறல்: ரூ.1 கோடியை நெருங்கும் அபராதம் வசூல்!!


ஊரடங்கு மீறல் காரணமாக வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.1 கோடியை நெருங்குகிறது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.


மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இருப்பினும், மக்கள் நோய் தொற்றின் வீரியத்தை புரிந்துக்கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அப்படி ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுள்ளனர். இதுவரை 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 2,05,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.98,07,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,