திருத்துறைப்பூண்டியில் தியாகி சீனிவாசராவ் 113 - வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தியாகி சீனிவாசராவ் 113 - வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேருந்துநிலையம் அருகில் உள்ள சீனிவாசராவ் நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
மன்னார்குடி ஆர்டிஒ புண்ணியகோட்டி சீனிவாசராவ் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் , நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் மற்றும் பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி, உலகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஞானமோகன் மற்றும் கட்சியினர் சீனிவாசராவ் திருவுருவ படத்திற்கு 113வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர் .
தியாகி சீனிவாசராவ் கர்நாடக மாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு 1961.ம் ஆண்டு செப்டம்பர் 30 -ந் தேதி தஞ்சையில் இறந்தார் இதையடுத்து அவரது உடல் திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் சீனிவாசராவுக்கு நூற்றாண்டு நினைவு மண்டம் அமைக்க கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து தமிழக அரசு சார்பில் ரூ 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 2009-ல் சீனிவாசரராவ் நூற்றாண்டு நினைவு மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,