முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு,மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் சார்பாக ரூ. 12, 00, 007/=ஐ அதன் தலைவரும் திருத்துறைப்பூண்டி பாரதி பேரவையின் நிறுவுனருமான பா. பாரதி தாசன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் நோய் தொற்று கிருமி தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. அதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு,மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் சார்பாக ரூ. 12, 00, 007/=ஐ அனுப்பியுள்ளதாக தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவரும் திருத்துறைப்பூண்டி பாரதி பேரவையின் நிறுவுனருமான பா. பாரதி தாசன் அவர்கள் தெரிவித்தார்கள்,உடன் இருந்தவர்கள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பா. குகநாதன்,
ஆரூர் முத்து, செந்தில் வடிவேலன்,ஐயப்பன்,மருது,கார்த்தி,மாரிமுத்து,சக்திகணேசன்,பால சுப்பிரமணிய பாரதி, ஆகியோர் உடனிருந்தனர் மேலும் தஞ்சாவூரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தினந்தோறும் காலை 500 பேருக்கு கபசுரக் குடிநீர் சூரண கஷாயமும் காலை டிபன் பொங்கலும், மதியம் 500 பேருக்கு சாப்பாடும்,இரவு 500 பேருக்கு சப்பாத்தியும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்கள்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments