நான் ஒரு நாள் 

கவிதை பக்கம்


              நான் ஒரு நாள் 


 


என் பகல் இரவில் ஆரம்பமாகிறது 
நிலா வட்டமாக உதித்து எனது பகலை இரவாக்கிட நினைக்கிறது 
எனது பகலில் சிதறிக் கிடக்கின்ற உடுக்கள் 
இரவின் வெள்ளை நிறத்தை இரசிக்கின்றன 


எனது இரவு பகலில் தொடங்குகிறது 
சூரியன் கறுப்பாக உதித்து எனது இரவினை
இரகசியங்கள் அற்றதாக மாற்றுகிறது


எனது பகல் உறங்கி என்னைக் கனவு காண்கிறது 
அக்கனவில் நான் ஒரு பறவையாகி எனது பகலின் அழகு பற்றிப் பாடுகிறேன் 
வனமும் வானமும் பூமியும் கடலும் ஆடிப்பாடி 
மகிழ்கின்றன 


எனது இரவு விழித்திருந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது 
அவ்விழிப்பில் நான் ஒரு மரமாகி நறுமணமுள்ள பூக்களைப் பூக்கிறேன் 
எங்கும் எனது வாசம் பரவுகிறது 
அவ்வாசத்தினை எனது பெயர் சொல்லி 
ஒருத்தி அழைக்கிறாள் 


எனது ஒரு நாள் என்னைக் கடந்து செல்லும் போது 
அதன் சிறகில் இறுகப் பிடித்தபடி நான் பறந்து கொண்டிருக்கிறேன்


நான் ஒரு நாள் என்றால் யாரும் நம்புவார்களா என்னை மட்டும் தவிர


ராஜகவி ராகில் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை