நேர்மறை எண்ணங்களை நன்றியுணர்வுடன் பகிர்வோம் பகுதி 2 

நேர்மறை எண்ணங்களை நன்றியுணர்வுடன் பகிர்வோம்"


பகுதி 2 


பகுதி ஒன்றில் மசாரு எமோட்டா பற்றியும் அவரது ஆய்வும் ஒன்றின் மூலம் நேர்மறை எண்ணங்களை நன்றியுணர்வுடன் பகிர்தலால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பார்த்தோம்.
இன்று நாம் பார்க்க இருப்பது மசாரு எமோட்டா வின் மற்றொரு ஆய்வு பற்றியும் அதனால் விளையும் நேர்மறை எண்ணங்களை பற்றியும் தான்.


மசாரு எமோட்டா இரண்டு பூந் தொட்டிகளை எடுத்துக்கொண்டார்.ஒரு பூந் தொட்டியில் காகிதத்தில் நன்றி என்று எழுதி ஒட்டினார்.மற்றொன்றில் முட்டாள் ஒன்று எழுதி ஒட்டினார்.


பூந் தொட்டியில் போடுவதற்காக சில விதைகளை எடுத்து பூந் தொட்டியில் போடாது முதலில் ஒரு கவரில் போட்டார் அந்த கவரின் வெளிப்பக்கத்தில் நன்றி என்று எழுதினார்.அதே போல் மற்றொரு கவரில் சில விதைகளை போட்டு அதன் வெளிப்பக்கத்தில் முட்டாள் என்று எழுதி ஒட்டினார்.


சில நாள்கள் கழித்து நன்றி என்று எழுதிய  பூந் தொட்டியில் நன்றி என்று எழுதி கவரில் இருந்த விதைகளை போட்டார்.அதேபோல் முட்டாள் என்ற கவரில் இருந்த விதைகளை எடுத்து முட்டாள் என்று எழுதி பூந்தொட்டியில் போட்டார்.


இரண்டு பூந் தொட்டிக்கும் தண்ணீர் ஊற்றுவதறக்கு தனித் தனி தண்ணீர் ஊற்றும் கேன் எடுத்துக்கொண்டு அதிலும் ஒரு கேனில் நன்றி என்றும் மற்றொன்றில் முட்டாளென்றும் எழுதி ஒட்டினார்.


நன்றி என்று எழுதிய தண்ணீர் கேனை நன்றி என்று எழுதிய பூந் தொட்டியில் ஊற்றினார்.முட்டாள் என்று எழுதிய தண்ணீர் கேனை முட்டாள் என்று எழுதிய பூந் தொட்டியில் ஊற்றினார்.இதேபோல் தினசரி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி வந்துள்ளார் எமோட்டோ அவர்கள்.


சில வாரங்கள் கழித்து நன்றி என்ற எழுதி ஒட்டப்பட்ட பூந்தொட்டியின் வளர்ச்சி வியக்கும் வகையில் அமைந்துள்ளது.அதன் அனைத்து பாகங்களும் உறுதியாகவும் பலமாகவும் இருந்திருக்கிறது.


முட்டாள் என்று எழுதி ஒட்டிய பூந்தொட்டியின் வளர்ச்சி வியக்கும் விதமாக இல்லை மற்றும் அதன் கிளைகள் அனைத்தும் காய்ந்து உள்ளது.உறுதியாகவும் பலமாகவும் இல்லை.


இதிலிருந்து மசாரு எமோட்டா அவர்கள் கூறுவது நன்றி என்ற வார்த்தைக்கு சக்தி அதிகம்.நேர்மறையான‌ எண்ணங்கள் அனைவரிடத்திலும் உள்ளது எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறை எண்ணங்கள் வரும்போது நம்மால் முடிந்த அளவு நன்றியை தெரிவிக்கலாம் என்கிறார்.


- கீர்த்தனா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,