மீட்டியது சிவம் மீண்டது சிவம் (2)
மீட்டியது சிவம்
மீண்டது சிவம் (2)
----------------------------
சங்கரன் சொல்லை
சாஸ்வதம் ஆக்கு
அக ஆழ் உணர்வை
வேதம் ஆக்கு
அண்டத்தில் தேடியது
அகத்தில் ஜனித்தது
அகத்தில் ஜனித்தது
புறத்தை ஆண்டது
அகத்தை ஆண்டது
அகந்தை பூண்டது
அகந்தை பூண்டது
வலியை கொண்டது
வலியை கொண்டது
அகிலம் உணர்ந்தது
அகிலம் உணர்ந்தது
சகலமும் அறிந்தது
சகலமும் அறிந்தது
சாத்திரம் பயின்றது
சாத்திரம் கண்டது
சாவியை மீட்டது
சாவியை மீட்டது
கதவுகள் திறக்க
திறந்த கதவுகள்
உயர்வை தந்தது
உயர்ந்து உயர்ந்து
மேலே செல்ல
கருத்துக்கள் அனைத்தும்
கூட்டினுள் பாய்ந்தது
பூட்டி வைத்த
பழமைகள் யாவும்
வடிகால் கண்டு
வடித்து கொண்டது
வடித்து வைத்த சிலையும் இசைந்து
வரம் தரும்
தேவதைகள்
அனுப்பி வைத்தது..
புறத்தை பூட்டி
அகத்தை நாடு
சங்கரன் சொல்லை
சாசனம் ஆக்கு
--T. ஜெயந்தி ராகவன்
Comments