திருத்துறைப்பூண்டி அருகே திருவழஞ்சுழி ஊராட்சியில் கரூரில் இருந்து பிழைப்பு தேடி சர்க்கஸ் நடத்த வந்த 21நபர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ரூ 5,000 நிதி உதவி வழங்கிய திமுக எம்எல்ஏ ஆடலரசன்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருவழஞ்சுழி ஊராட்சியில் அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய திருவிழாவிற்கு கரூரில் இருந்து பிழைப்பு தேடி சர்க்கஸ் நடத்த வந்த 21நபர்களுக்கு காய்கறிகள்
உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ரூ 5,000 நிதி உதவி வழங்கிய திமுக எம்எல்ஏ ஆடலரசன்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பேரிடரில் 144 தடை உத்தரவு போடப்பட்டதால் கரூரில் இருந்து கோவில் திருவிழாவிற்கு ஊர் ஊராக செல்லும் சர்க்கஸ் குழுவினர் திருத்துறைப்பூண்டி அருகே புற்றடி மாரியம்மன் கோவில் தீமிதி திரு விழாவிற்கு பிழைப்பு தேடி வந்தனர்.
ஊரடங்கு உத்தரவால் திரு விழா ஒத்திவைக்கப்பட்டது இந்த நிலையில் சர்க்கஸ் குழுவினர் வருமானமின்றி உண்ண உணவின்றி கோவில் அருகே வயல் வெளியிலேயே தங்கி தவித்து வருகின்றனர் .அப்பகுதியைசேர்ந்த ஊர்மக்கள் உதவிகள் புரிந்து வந்த நிலையில் அதுவும் தற்போது நின்றுபோனதால் உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் ஒட்டகம், குதிரை, ஆடு, நாய், குரங்கு போன்ற விலங்குகளும் பசியால் தவித்து வருகின்றது. இதையறிந்த ஒரு சிலர்
அரிசி, பருப்பு, குழந்தைகளுக்கு பிஸ்கட், பால், சர்க்கரை, டீத்தூள் வாங்கி கொடுத்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் சர்க்கஸ் குழுவினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ரூ 5000 நிதி உதவி வழங்கி அவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments