மீட்டியது சிவம்  மீண்டது சிவம் (3)

மீட்டியது சிவம் 
மீண்டது சிவம் 
================
(3)


அனுதினம் நீயும் 
வேதம் பழகு 


வேதம் என்பது 
தேகத்தின் ஆதி 


ஆதியில் இட்ட 
முடிச்சை அவிழ்க்க 
தேகம் பெற்று 
பேதம் அறுக்க 


மந்திர முடிச்சு 
அறிவை அடையும் 
உள்ளே செய்யும் 
வேலைகள் கொண்டே 
முடிச்சின் இறுக்கம் 
தளர்த்திக்கொள்ளும் 


அகம் தன்னை 
அகந்தை விட்டு 
செல்ல புறம் 
தன்னை முடிச்சும் 
பற்றி கொள்ளும் 


முடிச்சு அவிழ 
பட்டிடும் பாடு 
வேத ரகசியம் 
அறித்  தூண்டும் 


வேகம் கூட்டி 
வேலைகள் செய்ய 
வேதம் வந்து 
வேள்விகள் புரியும் 


தயக்கம் கொண்டால் 
தயங்கிநிற்பாய் 


மயக்கம் கொண்டால் 
மயங்கி நிற்பாய் 


வழக்கம் போலே 
சிறுமையில் வீழ 


உயர வேண்டிய 
வேலைகள் எதற்கு 


பேழைகள் திறக்கும் 
கோல்கள் கொண்டு 
கோள்களின்  வீச்சு 
கோளம் தாண்டும் 


எரியும் தீயில் 
பொய்மையை ஊற்ற 
மெய்யும் வந்து 
மெய்யை அடையும் 


யாகம் வளர்த்து 
யோகம் செய்தல் 
மோகம் அறுத்து 
போகம் சேர்க்கும் 


சங்கரன் சொல்லை 
சாஸ்வதம் ஆக்கினால் 
என்றோ விளைவது 
இன்றே விளையும் 


தேகத்தில் உள்ள 
எலும்பும் சதையும் 
நரம்புகள் முடுக்கி 
பிண்ணி வைத்தேன் 


உயிரை பாய்ச்சி 
அறிவை தெளித்து 
கூட்டில் உறைய 
உருகி கேட்டாய் 


நீ கேட்ட பிறப்பு 
நீயே கேட்டு 
வாழும் போது 
விதியென சொல்வீர் 


உந்தன் பாதை 
உயரம் சேர்க்க 
வேண்டிய மார்க்கம் 
அமைத்து கொண்டாய் 


விண்ணை தாண்டி 
பூமியை அடைந்து 
வந்த வேலைகள் 
யத்தனம் செய்து 


புவியில் உன் இருப்பை 
சாதகம் ஆக்கு 
உருளும் பொழுதுகள் 
உருண்டு போனால் 
வறண்டு போகும் 
பாதை காணும் 🍃🌸


T. ஜெயந்தி ராகவன் 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி