இலக்கியச் சோலை    3

 

இலக்கியச் சோலை       


பகுதி  3  


 


   ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’



 


 ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’  என்று தொடங்கும் வரியைக் கொண்ட பாடலை உலகுக்குத் தந்த கணியன் பூங்குன்றனார்   என்ற  சங்க காலப் புலவரைப் பற்றி சற்றே காண்போம்.    கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன்.   கணிமேதையார், கணிமேவந்தவள்  என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை.   இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார்.


 


புறநானூற்றிலும்  (புறம்: 192)  நற்றிணை  (நற்றிணை:226)  யிலும் இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.


இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை எவ்வளவு அழகாக  விளக்குகிறது   படியுங்கள். 










 

யாதும் ஊரே யாவரும் கேளிர்


தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.





 


இதன் பொருளைப் படியுங்கள்


எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.


 


(தொடரும்)


    


செ ஏ துஐரபாண்டியன்









  

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,