இன்று 30 வது உலக இரத்தம் உறையா நோய் விழிப்புணர்வு நாள்
இன்று 30 வது உலக இரத்தம் உறையா நோய் விழிப்புணர்வு நாள் (World Hemophilia Day – 30th year).
புற்று நோயைப் போல், இப்பொழுதுள்ள கொடிய கொரோனா தொற்று நோய் போல், இதுவும் ஒரு கொடிய நோயாகும் . உலகிலுள்ள 210 நாடுகளில் மனித வர்க்கமே கொத்து கொத்தாக இப்போது அழிந்து கொண்டிருக்கிறது கொரோனா என்ற கொடிய நச்சு தொற்று நோயால். இதற்கு முன்னரே சில நோய்கள் மனித இனத்தை தாக்கிக் கொண்டுதான் இருந்தன. அவற்றில் சில முற்றிலும் குணப்படுத்தக் கூடியதாகவும் சில குணப்படுத்த இயலாத நிலையிலும் உள்ளன. குணப்படுத்த இயலாத நிலையிலுள்ள சிலவற்றில் ஒன்றுதான் இரத்தம் உறையா நோய். இன்றைய தினம் விழிப்புணர்வு நாள் என்பதால் அந்நோய் குறித்து ஒருசில தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்நோய் உள்ளவர்கள் உடலில் சிறு காயம் ஏற்பட்டாலோ, இரத்தம் தொடர்ந்து வெளியேறுவதை எந்த மருந்தினாலும் தடுக்க முடியாது. எவ்வளவு கொடுமை என்று எண்ணிப் பாருங்கள். அவர்களுக்கு இரத்தம் கலந்த மலம், மற்றும் மூக்கு, சிறுநீரில் இரத்தம் ஒழுகுதல் போன்ற பல உடல் சார்ந்த பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி றார்கள். காரணம் உடலில் சிறிய காயம், கீறல் ஏற்பட்டாலும் அதிகமான இரத்தக் கசிவு ஏற்படும். தன் மகனுக்கு அத்தகைய நோய் உள்ளது என்று சுமார் 15 வருடங்களுக்கு முன் ஒரு தாயின் வேதனைக் குரல் இன்னமும் என்னுள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சில உண்மைகள் 1. இந்நோய் உடலில் இரத்தம் உறையக் காரணமான புரோட்டீன் இல்லாததால் ஏற்படுவதாகும். 2. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகளுக்கு இந்த நோய் இருப்பதாக அறியப்படுகிறது. எனவே, அவர்கள் இரத்தம் மற்றும் பிளாஸ்துமாவை அடிக்கடி மாற்ற வேண்டியது அவசியமாகும். 3. இது அரச நோய் என்பார்கள். 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல அரச குடும்பத்தினர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 4. இந்த நோய் ஆண், பெண் இரு பாலரையும் பாதிக்கும். எனினும், பெண்களை விட ஆண்களே அதிகம் தாக்குதலுக்கு ஆளானதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 5. ஒரு பெண் தன் தந்தைமூலம் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவள் சுமக்கும் குழந்தைக்கும் இது பரம்பரை நோயாகப் பரவும். 6. உலகில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்நோயை குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டிருந்தாலும் இன்னும் முழுமையான அளவு குணப்படுத்தக் கூடிய மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி பெறவில்லை.
அனைவருக்கும் நோயற்ற வாழ்வை இறைவன் அளிக்க பிரார்த்திக்கும்
செ ஏ துரைபாண்டியன் |
Comments