எண்ணங்கள்   சக்தி   வாய்ந்தவை


 
எண்ணங்கள்   சக்தி   வாய்ந்தவை


 


இக்கட்டுரை எழுதப்படும் 10-04-2020 பிற்பகல் 2-30 வரை  கோவிட் 19 (கொரோனா கொடிய தொற்று) நோயினால் உலகெங்கும் சுமார் 96,000 பேர் இறந்துள்ளனர்.  சுமார் 16 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  என்ற தகவல் தொலைக்காட்சியில்  வந்துள்ளது. 


 தமிழகத்தில் தற்போது நிலவும் ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க தமிழக  அரசு நியமித்துள்ள மருத்துவர்கள் அடங்கிய  குழு பரிந்துரைத்துள்ளது என்ற செய்தியும வந்துள்ளது.   இந்நிலையில் ஏப்ரல் 15-லிருந்து ஏப்ரல் 29 வரை தமிழகத்தில்  ஊரடங்கு  நீட்டிக்கப்படும்   என்பது  உறுதியாகி  உள்ளது. 


தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பது  நாளைய தினம் இந்திய பிரதமரால் அறிவிக்கப் படும் என்ற தகவலும் வந்துள்ளது. எவ்வளவு நாட்கள், எங்கெங்கு, எந்த, எந்த வகையில் நீட்டிக்கப்படும்  என்பது  நாளை  தெரிய வரும். 


இந்நிலையில் கீழ்க்கண்ட தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற வகையில் சில உ.ண்மைகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.    


எண்ணங்கள்  மிகவும்   சக்தி   வாய்ந்தவை  என்பது  போதனை யாளர்களின், ஆன்மிகவாதிகளின், மனநிலை அறிஞர்களின், ஆய்வாளர்களின், சித்தர்களின், சான்றோர்களின், ஆன்றோர்களின், சாதனையளர்களின்,  அரசியல், ஆன்மிகம்,  திரைத்துறை  பிரபலங்களின் கருத்து.   விளக்கமாகத் தெரிவிக்க வேண்டுமென்றால்  ஒருவன் என்ன நினைக்கிறானோ,  அது பிற்காலத்தில் நடக்கும், அதுவாகவே ஆக முடியும் என்பது நிரூபிக்கப்பெற்ற உண்மை.   அதற்குப் பல  எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும்.    இப்போது திரைப்படங்களில்  தெரிவிக்கப்பெற்ற கருத்துக்கள் எதிர்காலத்தில் உண்மையாகி விட்டன என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு                             கோவிட் 19  (கொரோனா கொடிய  தொற்று) போன்று காற்றில் பரவிய ஒரு தொற்றால் உலகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை  தத்ரூபமாக  2011  சூலை  13-ல்  வெளியான கன்டாஜியன் என்ற திரைப்படத்தின்  முன்னோட்டமும்  தொடர்ந்து  அக்டோர் 2012 அப்படமும்  ஒரு  எடுத்துககாட்டு.  


trailer of the movie for reference here                      இப்படத்தை தயாரித்து வெளியிட்டவர்கள்  வார்னர் பிரதர்ஸ் என்ற மிகவும் பிரபலமான உறாலிவுட்  திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்.  இப்படத்தைப் பற்றிய முழு  செய்தி   இந்து பத்திரிகையில்  சென்ற  மார்ச் முதல் வாரத்தில்  வெளியிடப்பட்டது.   ஆனால்,  அப்போதும்  அதை மாநில மத்திய அரசுகள் இப்போதுள்ள தீவிரத்தோடு அணுகவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு   செய்தி.   அண்மையில்  இத்திரைப்படத்தை, சோனி பிக்ஸ் தொலைக்காட்சி  ஒரு நாள் இரவு 9-50 மணியளவில் திரையிட்டது.  


                               இப்படத்தை பார்த்தவர்கள், இப்போது உலகம் எந்த நிலையில் தவிக்கிறதோ, குழப்பத்தில் இருக்கிறதோ, திண்டாடுகிறதோ, திணறுகிறதோ, துன்பப்படுகிறதோ, வழி  தெரியாமல் அவதிப்படு கிறதோ, அதைப் போல்  சுமார் 1  மணி 45 நிமிடம் ஓடிய அந்தப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது  என்பதை உணர்ந்தார்கள்.   அப்படத்தைப்  பார்த்த  எனக்குத்  தெரிந்த  ஒரு  மருத்துவர்  பயத்தின் காரணமாக தனது  தூக்கத்தை தொலைத்து விட்டதாக  கட்டுரையாளரிடம்  தெரிவித்தார்.


                திரைப்படம் வெளியிடப்பட்டு  சுமார்  8  வருடங்கள்  ஆகின்றன.      ஆனால், அது உண்மையாகி  விட்டது.   திரைப்படத்தில்  கூட இத்தகைய எண்ணங்களின்  பிரதிபலிப்புகள்  வரக்கூடாது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. உங்களுடைய எண்ணங்கள் நல்லவையாக, உயர்ந்தவையாக  இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


  1954-லிருந்து வெளி வந்த தமிழ்ப்படங்களின் கருத்துகள் எப்படி  நடைமுறையில் நிறைவேறின என்பதை ஒவ்வொன்றாக தொடர்ந்து பார்ப்போம்.


(தொடரும்)   

செ, ஏ, துரைபாண்டியன்  


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை