கால்  நூற்றாண்டுக்குமேல்  பல்கலைக் கழக  துணைவேந்தர்  என்ற பெருமைக்குரியவர்  

 கால்  நூற்றாண்டுக்குமேல்  பல்கலைக் கழக  துணைவேந்தர்  என்ற பெருமைக்குரியவர்  நினைவுநாள்                  பிறப்பால் இரட்டையர்களான  ஆற்காடு சகோதரர்கள் சர் இராமசாமி முதலியாரும் சர் இலட்சுமணசாமி முதலியாரும். அக்டோபர் 14, 1887 இல்  கர்னூலில்  பிறந்து கர்னூல் நகராட்சிப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடிந்து  சென்னை கிறித்துவ கல்லூரியில் மேற்படிப்பு  தொடர்ந்தனர்.  இராமசாமி  சட்டக் கல்லூரியிலும், இலட்சுமணசாமி மருத்துவக் கல்லூரியிலும் தங்களது கல்வியைத் தொடர்ந்தனர்.  • சிறந்த கல்வியாளரான  மருத்துவர்  ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார்  மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில்  27  ண்டுகள் துணை வேந்தராகவும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில்    முதல்வராகவும்  

  • பணியாற்றியது மிகப் பெரிய சாதனை அல்லவா? இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் Clinical Obstetrics first edition 1938; later revised as Mudaliar and Menon, 10th edition, ISBN 81-250-2870-6 தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வந்தது.  தற்போதைய தகவல் தொழில்நுட்ப  வளர்ச்சியால்  எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அந்த நூல் இன்னமும்  அடிப்படை திறனுள்ளதாகக் கருதப்படுகிறது.


            உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்ததோடு 8 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 லும் 14 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 லும் செயற்பட்டார்.


               இந்திய விடுதலைக்குப் பின்பு டாக்டர் ஏ.எல். முதலியார் தலைமையில், பல கல்வி வல்லுநர்கள் அடங்கிய இடைநிலை கல்வி ஆணையம் 195-ல் அமைக்கப்பட்டது. இது இடைநிலைக் கல்வி ஆணையம் என்று கூறப் பட்டாலும் இதில் இடம்பெற்ற அறிஞர்கள் தொடக்கப் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி பல்கலைக்கழகக் கல்வி வரை உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை ஆய்ந்து சிறந்த முறையில் ஒரு கல்விக் கொள்கையை அளித்துள்ளனர். இந்த ஆய்வு அறிக்கையில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே  பள்ளிக் கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறிப்பிட்டு அவற்றைக் களைவதற்கான செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.


                    கிராமப்புற மருத்துவ சேவை வரலாற்றில் 1959 ஆம் ஆண்டில் முதலியார் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை.


                  இந்திய அரசு இவருக்கு, பத்ம பூஷண் விருது 1954-லும்  பத்ம விபூஷண் விருது  1963 ஆம் ஆண்டிலும் வழங்கி சிறப்பித்துள்ளது.


                 அதற்கும் முன்னதாக, knight   என்ற பட்டத்தை   1945   New  Year  Honours என்ற வகையில்  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பெற்றனர்.


                    அவர் மறைவு தினமான இன்று அவரைப் போல் பேரும் புகழும் இன்றைய இளைய சமுதாயத்தினர் பெற முயற்சிகள்  மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.    


செ ஏ துரைபாண்டியன்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை